Friday, July 23, 2010

எய்ட்சுக்கு மருந்து விரைவில் வருகிறது



வாஷிங்டன் : எய்ட்ஸ் நோயை ஏற்படுத்தும் எச்ஐவி கிருமிகள் வளர்ச்சியை 90 சதவீதம் தடுக்கும் இரண்டு தடுப்பு மருந்துகளை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். உலகம் முழுவதும் 2008ம் ஆண்டு நிலவரப்படி 3.34 கோடி எய்ட்ஸ் நோயாளிகள் உள்ளனர். உயிர்க் கொல்லி நோயான எய்ட்சுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகள் உலகின் பல நாடுகளிலும் தொடர்கின்றன. இந்த நிலையில், அமெரிக்க தேசிய அலர்ஜி மற்றும் தொற்று நோய் ஆராய்ச்சி நிறுவனம், எய்ட்சை எதிர்க்கும் எதிர்ப்பு சக்தியை அளிக்கக்கூடிய 2 மருந்துகளை கண்டுபிடித்துள்ளது.

இதுபற்றி நிறுவன தலைவர் அந்தோணி பாஸி கூறுகையில், ‘’கடந்த 20 ஆண்டுகளாக எய்ட்சுக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் நடக்கின்றன. சிறிய அறிகுறிகூட கிடைக்கவில்லை. தடுப்பு மருந்துக்கான முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. ஆனால், கடந்த 2 ஆண்டுகளில் எய்ட்ஸ் நோயாளிகள் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 2 மருந்துகள் நம்பிக்கை அளிக்கின்றன’’ என்றார். தாய்லாந்தில் கடந்த ஆண்டில் 16,000 பேருக்கு தரப்பட்ட மருந்து எதிர்ப்பு சக்தியை அதிகரித்தது. இதனால், எய்ட்சுக்கு தடுப்பு மருந்து தயாரிப்பது சாத்தியம்தான் என்ற நம்பிக்கை வந்துள்ளது.

எய்ட்ஸ் நோயாளியின் உடலில் 2 தடுப்பு மருந்துகளை இணைத்து செலுத்தினால், எச்ஐவி கிருமிகள் வளர்ச்சியை 90 சதவீதம் தடுக்க முடியும் என தெரிய வந்தது என்றும் பாஸி தெரிவித்துள்ளார். இந்த முன்னேற்றங்கள் பற்றி வியன்னாவில் நடைபெற உள்ள 18வது சர்வதேச எய்ட்ஸ் மாநாட்டில் விளக்கப்படும். இதனால், எய்ட்சுக்கு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகளுக்கு ஊக்கம் கிடைக்கும். எனினும், முற்றிலும் எய்ட்சை தடுக்கக் கூடிய, குணப்படுத்தக் கூடிய மருந்து எப்போது சாத்தியமாகும் என தெரியவில்லை.

இருந்தாலும் எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டறியாதவரை தான் நல்லது..

தன்அடக்கத்தோடு மனிதன் வாழ இந்த மாதிரியான நோய்கள் கூட துணைபுரிகின்றன..

No comments:

Post a Comment