
ஒரு சவப்பெட்டி செய்யும் தொழிற்சாலையில் சவப்பெட்டிகள் சரியாக விற்பனை ஆகவில்லை. கவலையடைந்த அந்த தொழிற்சாலையின் முதலாளி, தனது பொருளை நன்றாக, பிறரைக் கவரும்படி விளம்பரம் செய்யச்சொல்லி, ஒரு விளம்பரக் கம்பெனியை நாடினார்.
அந்த விளம்பரக் கம்பெனியின் முதலாளி, சவப்பெட்டியை சிறப்பாக விளம்பரம் செய்ய ஒப்புக் கொண்டார். எப்படி விளம்பரம் செய்வது என்கிற யோசனை அவருக்கு பிடிபடவில்லை.
அந்த சமயத்தில் ஒரு தினசரியைப் புரட்டிக் கொண்டிருந்தார். அதில் ஒரு விமானக் கம்பெனியின் விளம்பரம் கண்ணில் பட்டது. அதில் இருந்த வாசகம் “இப்போது பயணம் செல்லலாம். எப்போது வேண்டுமானாலும் பணம் செலுத்தலாம்!” என்ற வரிகள் கண்ணில் பட்டது. இதைக்கண்ட அந்த விளம்பரக் கம்பெனியின் முதலாளிக்கு மின்னலாக ஒரு யோசனை உதித்தது. உடனே கையில் பேனாவை எடுத்து, சவப்பெட்டி விளம்பரத்திற்கு வாசகம் ஒன்று எழுத ஆரம்பித்தார்.
அந்த வாசகம் : இப்போது பணம் செலுத்தலாம். எப்போது வேண்டுமானாலும் பயணம் செல்லலாம்!!!.......
No comments:
Post a Comment