Saturday, November 15, 2008

நீருக்குள் பிரசவம்
















நீருக்குள் பிரசவம்

பிறந்த குழந்தையுடன் டாக்டர் மகிழ்ச்சியுடன் காணப்படும் படத்தை அண்மையில் சில பத்திரிக்கைகள் வெளியிட்டிருந்தன.

குழந்தையுடன் டாக்டர் இருப்பது அப்படி என்ன விசேஷமானது என்று கேட்கலாம்.

விசேஷமானதுதான்! அந்த குழந்தை வீட்டிலோ, மருத்துவமனையிலோ அதாவது நிலத்திலேயே பிறக்கவில்லை. நீருக்குள் பிறந்தது!

ஒரு பெண் விரும்பினால் பிரசவத்தை நீருக்குள் வெத்துக் கொள்ளலாம், நீருக்குள் வைத்துக் கொண்டால் அது தாய்க்கும் வசதி. குழந்தைக்கும் வசதி என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

உலகின் சில நாடுகளில் இந்த முறை கையாளப்படுகிறது. சோவியத் யூனியனைச் சோ்ந்த டாக்டர் இகோர் சார்க்கோவஸ்கி இப் பிரசவ முறையை ஆதரிக்கிறார்.

கர்பிணியின் வயிற்றில் உள்ள குழந்தையானது கர்ப்பப்பையில் நீருக்குள் மிதந்தபடி உள்ளது. எனவே நீருக்குள் பிரசவம் நடைபெறுமானால் தாயின் வயிற்றிலிருந்து வெளி உலகுக்கு வரும் சிசுவானது முதலில் தனக்கு பழக்கப்பட்ட சூழ்நிலையிலேயே பிரவேசிக்கிறது. எனவே சாதாரன முறையில் அதாவது நிலத்தில் பிறக்கும் குழந்தை நீரில் கைகால்களை உதைத்துக் கொள்கிறது. டைவ் அடிக்கிறது. இவையும், குளிர்ந்த நீரும் சேர்ந்து குழந்தையின் நோய் எதிர்ப்புத் திறனைத் தூண்டி விடுகின்றன என்று டாக்டர் சார்க்கோவஸ்கி கூறுகிறார்.

ஒரு கர்ப்பிணி நீருக்குள் பிரசவத்தை வைத்துக் கொள்ள முடிவு செய்தால் அதற்குச் சிறிது ஆயத்தப் பயிற்சியைப் பெற்றாக வேண்டும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

சோவியத் யூனியனில் யாரோஸ்லாவ் குடும்ப சங்கத்தை சேர்ந்தவர்கள் யாரோஸ்லா மகப்பேறு மருத்துவமனையில் விசேஷ நீச்சல் குளத்தை அமைத்தனர். அவர்களின் இந்த ஒத்துழைப்பின் பலனாக ஒரு கர்ப்பிணியிடம் நீருக்குள் பிரசவ முறை பின்பற்றப்பட்டது.

இம்முறை மூலம் பிரசவம் மருத்துவத்துறையில் ஏற்பட்டுள்ள ஒரு புதுமை நிகழ்ச்சி என்றே கருதப்படுகிறது.

இந்தியாவிற்க்கும் இந்தமுறைகள் வேகமாக பரவி வர ஆரம்பித்துவிட்டன.

நன்றி அழுத்துக

3 comments: